இலங்கையில் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பின்னணியில் நிக்காப், புர்க்கா மற்றும் புல்பேஸ் ஹெல்மட் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் வினவிய பின்னணியிலேயே இந்த விடயத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, முகத்தை மூடும் வகையில் அணியும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment