பரசூட் பயிற்சி - இராணுவ வீரர் உயிரிழப்பு




தியகாவா என்ற இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ கமாண்டர் படையணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை குச்சவெளி பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம் பெற்றது. இந்த இராணுவ வீரர் தியகாவா என்ற இராணுவ பயிற்சியின் பரசூட் கண்காட்சி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இவரது பரசூட் காற்றில் சிக்குண்டு கடலில் வீழ்ந்துள்ளார்.
கடலில் விழுந்த இவரை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.