இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றைய தினம் மின்கம்பங்கள் பலவற்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்திருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் 10 மாவட்டங்களில் 30, 719 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்த குடும்பங்களைச் சேர்ந்த 142,177 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இவர்களுள் 2 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். 3,079 வீடுகள் சேதமடைந்துள்ளன, இவற்றில் 75 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 61 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது 86 மத்திய நிலையங்களில் 10,812 குடும்பங்களைச் சேர்ந்த 44,489 பேர் தங்கியிருப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment