தொழில்முறை வழிகாட்டல் பயிற்சி நெறி செயலமர்வு




பாறுக் ஷிஹான்- FAROOK SIHAN  

இளைஞர் யுவதிகளுக்கான ஒருநாள் தொழில்முறை வழிகாட்டல் பயிற்சி நெறி  செயலமர்வு   ஞாயிற்றுக்கிழமை (15) நற்பிட்டிமுனை  அல் அக்ஸா வித்தியாலயத்தில்   Team 97 சமூக சேவை மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அரச தனியார்  உயர்கல்வி வாய்ப்பினை ஏற்படுத்துதல்இ உலக தொழில் சந்தையில்  வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் கருத்தரங்கில்  பேராசிரியர் றிஷாத் ஆதம்லெவ்வைஇ   சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்  எம்.எம். ஹசன் ஆகியோரால் வழிகாட்டல் விளக்கவுரைகள்     நிகழ்த்தப்பட்டது.

 இங்கு உரையாற்றிய பேராசிரியர் றிஷாத் ஆதம்லெவ்வை,

எமக்கான இலக்குகள் என்றும் நிதந்தரமானவையல்ல காலம்,எமக்கான இலக்குகள் மாறிக்கொண்டே இருக்கும். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும்  தொழில்நுட்ப உலகில் எமக்கான வளத்தினையும் துறைசார் தகமைகளையும்  வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

திறன்களை வளர்த்து கொண்ட அனைவருக்கும் தொழில் நிச்சயம் தேடிவரும். மாணவர்கள் இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும்.