(க.கிஷாந்தன்)
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில், மலையகத்தில் கண்டி, நுவரெலியா, ஹற்றன், தலவாக்கலை என பல பகுதிகளிலும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, நாடு முழுவதும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வெடி கொழுத்தியும் பாற்சோறு வழங்கியும் தமது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
Post a Comment
Post a Comment