#IsmailUvaizurRahman.
ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர், இன்று முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளையும் மீறி, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பலாத்காரமாக இறந்த தேரரின் உடலை எரித்துள்ளனர். அப்போது, அங்கு கூடியிருந்து சட்த்தரணிகள் நீதிமன்றின் கட்டளையின மதிக்குமாறு பௌத்த தேரர்களிடம் வேண்டியிருந்தனர்.ஆனால், அங்கு குழுமியிருந்த பௌத்த தேரர்கள் பௌத்த மதத்திற்குத்தான் முன்னுரிமை என்றும் கூக்குரலிட்டனர்.
சட்டத்தரணி சுகாஸ் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்து, அச்சுறுத்தல் செய்ததுடன் அவர்களைத் தாக்கவும் முட்பட்டதாகத் தெரிய வருகின்றது.இதனை முன்னிட்டு நாளை முல்லைத்தீவு நீதிமன்ற சட்த்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களுக்கு ஆதவு தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் சங்கமும் நாளைய தினம் நீதிமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கவுள்ளது.
Post a Comment
Post a Comment