எங்கள் தெரிவு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு




நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவை ஆதரித்து தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை  (26.9.2019) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடாத்தியது‌.
இக்கூட்டத்தில் NFGG யின் பிரச்சாரச் செயலாளர் டாக்டர் ஸாஹிர், தேசிய அமைப்பாளர் நஜா மொஹமத், தவிசாளர் சிராஜ் மஷூர், தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பின் தலைவர்
பேராசிரியர் சந்தன அபேரத்ன , தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான சட்டதரணி உபுல் குமரப்பெரும, அருன் பிரேமச்சந்திர ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களும் உரையாற்றினர். NFGG கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமத் சபீன் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.
இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
தொடர்ந்தும் NFGG யும் NPP யும் இணைந்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க அவர்களை ஆதரித்து நாடளாவிய பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.