(க.கிஷாந்தன்)
சம்பள முரன்பாட்டினை தீர்க்க கோரி நாடாளவிய ரீதியில் ஆசிரியர்இ அதிபர் சங்கங்கள் ஒன்றிணைந்து (26,27) அன்றைய திகதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டத்தினால் மலையக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
குறித்த போராட்டம் காரணமாக மலையகத்தின் பல பாடசாலைகளில் (26) திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.
சில பாடசாலைகளில் அதிபர்கள் மாத்திரம் வருகை தந்திருந்த போதிலும் ஆசிரியர்கள் எவரும் சமூகமளித்திருக்கவில்லை. இதேவேளை ஒரு சில பாடசாலைகளில் அதிபர்கள் பாடசாலையின் சாவியினை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு பாடசாலையினை முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகமான மாணவர்கள் இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்து ஆசிரியர்கள் சமூகமளிக்காத காரணத்தினால் வீடு திரும்பினர்.
ஒரு சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் போராட்டத்த்னை முன் கூட்டியே அறிந்திருந்ததனால் அதிகமான மாணவர்கள் பாடசாலக்கு வரவில்லை.
இதே வேளை தபால் நிலையங்களில் சுகயீன விடுமுறை கோருவதற்காக அதிகமான ஆசிரியர்கள் டெலி மெயில் அனுப்புதற்காக கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் போராட்டம் காரணமாக 26.09.2019 அன்றைய நடைபெறவிருந்த ஆசிரியர் தடை தாண்டல் செயலமர்வுகள் மற்றும் சுகாதார துறையினர் பாடசாலையில் மாணவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படவிருந்த நடவடிக்கைகளும் இரத்தச்செய்யப்பட்டுள்ளன.
Post a Comment
Post a Comment