எருக்கலம்பிட்டி மகளீர் கல்லூரி முதலிடம்,கதைப்பாடலில்




தமிழ் மொழிதின போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற எருக்கலம்பிட்டி மகளீர் கல்லூரி
கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் கதைப்பாடல் நிகழ்ச்சியில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரி மாணவியர்கள் குழு முதலாம் இடம் பெற்று சாதனை புரிந்தமைக்காக மாபெரும் வரவேற்பு நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் அஸ்மீன் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மன்னார் நகரசபை தவிசாளர் முஜாஹிர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் வெற்றிபெற்ற மாணவர்களை கெளரவிக்கும் முகமாக பிரதேச சபை உறுப்பினர் மகிசா பள்ளி நிருவாகத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
அமோக வெற்றியீட்டி, பாடசாலைக்கும் மன்னார் கல்வி வலயத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.