அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்




முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள் ,அதற்கு துணை நின்றோர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி இன்று நண்பகல் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.


அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எஸ்.எல்.ஏ றசீத் தலைமையில் இடம் பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் அக்கரைப்பற்று நீதிமன்ற சட்த்தரணிகள் கலந்து  சட்ட ஆட்சியை நிலை நிறுத்தக் கேராரியும், நீதிமன்றக் கட்டளையினை மதிக்குமாறும் கோரியிருந்தனர்.