இந்தியாவில் தடை,இ-சிகரெட்டுக்கு




உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால், இ-சிகரெட்டு இறக்குமதிக்கும், விற்பனைக்கும் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது,
இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை தடைசெய்து ஆணை வெளியிட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிக்கோட்டின், நீர், கரைகின்ற மற்றும் சுவையூட்டும் பொருட்களை கலந்து நீராவியாக உள்ளிழுப்பதுதான் வேப்பிங் எனப்படுகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக கருதப்படும் இது, புகைப்பழக்கத்தை விட்டுவிட உதவலாம் என்கின்றனர். ஆனால், இதனால் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்பு இதுவரை முழுவதும் தெரியவில்லை.
இந்த வேப்பிங் கருவிக்கும் இந்த ஆணையில் தடைவிதிக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.
புகைபடிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியாவில் 100 மில்லியன் புகைபிடிப்போர் உள்ளதால், இ-சிகரெட் நிறுவனங்களுக்கு பெரிய சந்தை உருவாகும் வாய்ப்பு நிலவுகிறது.
இ-சிகரெட்டுக்கு தடை விதித்திருப்பதால், இதனை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம். பாரம்பரிய புகையிலை பொருட்களுக்கு தடையில்லை.
அதாவது உற்பத்தி, தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, விற்பனை, விநியோகம் மற்றும் இ-சிகரெட் தொடர்பான விளம்பரம் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இத்தகைய வேப்பிங் புகைப்பிடிப்பை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தனி ஸ்டைலாக இளைஞர்கள் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
புகைபிடிப்பவர்படத்தின் காப்புரிமைAFP
சீனாவுக்கு அடுத்தபடியாக புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. புகையிலை பயன்பாடு சார்ந்த நோய்களால் நாட்டில் ஆண்டுக்கு 9 லட்சம் பேருக்கும் மேல் இந்தியாவில் மரணம் அடைகின்றனர்.
வேப்பிங் கருவியான இ-சிகரெட்டை ஆதரிப்பவர்கள், புகைபழக்கத்தை மக்கள் நிறுத்த இது உதவுகிறது என்றும் இ-சிகரெட்டை தடை செய்வதன் மூலம் அது மீண்டும் அவர்களை புகைப்பழக்கத்தை நோக்கி தள்ளும் என்றும் வாதிடுகின்றனர்.
ஆனால் இ-சிகரெட் தடையை முன்மொழிந்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, இளம் வயதினர் மத்தியில் வேப்பங் ஒரு தொற்றுநோய் போல மாறிவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.
ஜூல் போன்ற மிக பிரபல இ-சிகரெட் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கு இந்திய சந்தை ஏதுவாக கருதப்பட்டாலும், அமெரிக்கா அல்லது பிரிட்டனில் இருப்பதுபோல இல்லாமல் இங்கு அந்த நிறுவனத்தால் வளரமுடியவில்லை.
புகை இல்லாத புகையிலை பொருட்கள் மற்றும் வேப்பிங் கருவிகளுக்காக கடந்த 2018-ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 10 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறது.
உலகெங்கும் தொடர்ந்து சிறிய அளவில், அதே சமயம் சீரான அளவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறியானது வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
வேப்பிங்படத்தின் காப்புரிமைSPENCER PLATT/GETTY IMAGES
ஆனால், வேப்பிங் கருவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
2011-ஆம் ஆண்டில் வேப்பர்கள் எனப்படும் இந்த கருவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக இருந்த நிலையில், 2018-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
மேலும் வரும் 2021-ஆம் ஆண்டில் இந்த இ-சிகரெட் கருவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 5 கோடிக்கும் மேலாக அதிகரிக்கும் என்று ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இ-சிகரெட்கள் பயன்பாட்டினால் உருவாகும் உடல்நலன் சார்ந்த பிரச்சனைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்தாண்டில் 450க்கும் மேற்பட்டவர்கள் வேப்பிங் பயன்பட்டால் நுரையீரல் தொடரான நோய்களால் இறந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இ-சிகரெட் பயன்பாடு, விற்பனை உள்ளிட்ட தடையை புதன்கிழமை இந்தியா அறிவித்துள்ளது. சுவை மற்றும் மணத்துக்காக சேர்க்கப்படும் பொருட்கள் அடங்கிய இ-சிகரெட்டுகளுக்கு செவ்வாய்கிழமை நியூ யார்க் மாகாணம் தடை விதித்தது. இவ்வாறு தடை விதித்த இரண்டாவது அமெரிக்க மாகாணம் நியூ யார்க் என்பது குறிப்பிடத்தக்கது.
வேப்பிங்படத்தின் காப்புரிமைGUILLEM SARTORIO/GETTY IMAGES
வேப்பிங் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்கள் (லோரா ஜோன்ஸ், பிபிசி)

வேப்பிங்: இ-சிகரெட் எவ்வளவு பிரபலமானது?

வேப்பிங் எனப்படும் புகைப்பழக்கத்தில் எவ்வளவு செலவிடப்படுகிறது. வேப்பிங் பழக்கம் உடையோர் எவ்வளவு பாதுகாப்பு உள்ளனர் என்று பார்ப்போம்.

01.பிரபலமாகி வரும் வேப்பிங்

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, புகைப்பிடிப்போர் எண்ணிக்கையில் சிறிய ஆனால், நிலையான வீழ்ச்சி உலக அளவில் ஏற்பட்டு வருவதாக மதிப்பிடப்படுகிறது. ஒரு பில்லியன் பேர் புகைப்பழக்கத்தை கைவிட்டுள்ளனர்.
ஆனால், வேப்பிங் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
வேப்பிங் பழக்கம் உடையோரின் அதிகரிப்பு
வரைபடம்
வேப்பிங் பழக்கம் உடையோரின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. 2011ம் ஆண்டு ஏழு மில்லியன் என இருந்த எண்ணிக்கை 2018ம் ஆண்டு 41 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2021ம் ஆண்டு வேப்பிங் பழக்கமுடைய வயதுக்குவந்தோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 55 மில்லியனாக இருக்கும் என்று சந்தை ஆய்வு குழுமமான யூரோமானிட்டர் மதிப்பிட்டுள்ளது.

02.இ-சிகரெட்டுக்கு செலவு செய்வதில் வளர்ச்சி

வேப்பிங் பழக்கம் உடையோர் அதிகரித்து வருவதால், இ-சிகரெட்டுக்கான சந்தையும் விரிவாகி வருகிறது.
உலக அளவில் இதற்கான சந்தை சுமார் 19.3 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 6.9 பில்லியன் என்ற மதிப்பைவிட மிகவும் அதிகமாகும்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இ-சிகரெட்டுக்கு மிக பெரிய சந்தைகளாகும். இந்த மூன்று நாடுகளில் மட்டும் 2018ம் ஆண்டு புகையில்லா புகையிலை மற்றும் வேப்பிங் பொருட்களில் செலவு செய்யப்பட்டுள்ளது.
வேப் பொருட்களுக்கான முன்னிலை 10 சந்தைகள்
வரைபடம்
உலக அளவில் மிக பெரிய வேப்பிங் சந்தையிலுள்ள புகையிலை அல்லாத எல்லா வகைகளையும் நிறுத்தவதற்கான ஒரு திட்டத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் முடிவு செய்யும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 33 மாநிலங்களில் வேப்பிங் பழக்கம் தொடர்பாக நிகழ்ந்த ஆறு இறப்புகள், 450 பேருக்கு நுரையீரல் தொடர்பான நோய் வந்ததாக பதிவு செய்யப்பட்டதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

03.திறந்த அமைப்பு இ-சிகரெட்டு மிகவும் பிரபலம்

இ-சிகரெட்டில் இரண்டு வகைகள் உள்ளன. திறந்த மற்றும் மூடிய அமைப்பு. திறந்த மற்றும் மூடிய டேங் என்றும் இவை அறியப்படுகின்றன.
திறந்த அமைப்பு இ-சிகரெட்டில், நீர்மம் ஆவியாகிய பின்னர். அதனை பயன்படுத்துபவரே அதனை நிரப்பி கொள்ளலாம். அகற்றிவிடக்கூடிய புகைக்குழலும் உள்ளது.
மிகவும் பிரபலமான பொருட்கள் யாவை?
வரைபடம்
மூடிய இ-சிகரெட்டில் நீர்மத்தை நிரப்பிக்கொள்ள தயாராக இருக்கும் பொருட்கள் உள்ளன. இதனை இ-சிகரெட்டு மின்கலத்தோடு நேரடியாக பொருத்தி கொள்ளலாம்.
இத்தகைய மூடிய இ-சிகரெட்டில் 10 பில்லியன் டாலர் வேப்பிங் பழக்கமுடையோர் இந்த ஆண்டு செலவழிப்பர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. திறந்த அமைப்பில் செலவு செய்ததைவிட அதிகமாக மூடிய அமைப்பில் செலவிடுவது இந்த ஆண்டுதான் முதல்முறையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

04.கடைகளில் அதிக இ-சிகரெட்டுகள் வாங்குதல்

இ-சிகரெட்டு பயன்படுத்துவோர் தாங்கள் பயன்படுத்தும் கருவியை அதற்கான சிறப்பு கடைகளில் வாங்குவதாக 2016ம் ஆண்டு எர்னஸ்ட் &யெங் ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.
புதிய பொருளை பற்றி அறிந்து கொள்ள அல்லது எந்த வகை தனக்கு மிகவும் பொருந்தும் என்று அறிந்து வாங்க, முதலாவது முறையாக தாங்களே நேரடியாக சென்று இ-சிகரெட்டை வாடிக்கையாளர்கள் வாங்குவதாக நம்பப்படுகிறது.
வேப்பிங் கடைகள் பிரிட்டனில் அதிகமாக காணப்படுகின்றன. மூவாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த கருவிகளை 21 சதவீதத்தினர் இணையத்தில் வாங்கியதாகவும் தெரிவித்தனர்.
விளக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
5, வேப்பிங் பாதுகாப்பானதா?
மரணங்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்பட்டதாக வந்த அறிக்கைகளை தொடர்ந்து அமெரிக்காவில் மிர்ச்சிகன் மாநிலம் இ-சிகரெட்டுக்கு முதலாவதாக தடை விதித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் வயது சராசரி 19 என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சான்றுகளை வைத்து பார்த்து, சிகரெட்டின் ஆபத்தில் சற்று இ-சிகரெட்டில் இருப்பதை பிரிட்னிலுள்ள மருத்துவர்களும், பொது சுகாதார நிபுணர்களும், புற்றுநோய் சேரிட்டி நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன.
தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட ஒரு மீளாய்வு 95 சதவீதம் இ-சிகரெட்டு பாதிப்பற்றது என்ற முடிவுக்கு வந்தது. "இ-சிகரெட்டு பொது சுகாதாரத்தில் ஒரு திருப்புமுனையாக அமையலாம்" என்று பேராசிரியர் அன் மெக்நெயில் இந்த மீளாய்வில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவை விட பிரிட்டனில் இந்த வேப்பிங் கருவியில் என்னென்ன இருக்க வேண்டும் என்று அதிக விதிமுறைகள் உள்ளன.
மிக குறைந்த அளவாக இருந்தாலும், சிகரெட்டு புகையில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இ-சிகரெட்டிலும் இருக்கலாம்.