பாறுக் ஷிஹான்
சுகாதார மேம்பாட்டு பணியகம் சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் காட்டலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ .எல் அலாவுதீன், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம் . எச் .றிஸ்பின், சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதார கல்வி உத்தியோகஸ்தர் எம் . சி ரெத்னகுமார், எம்.ஜெ.எம். பைரூஸ், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment