தங்கம் கடத்தல்: இலங்கையில் இந்தியர்கள் கைது; தாய்லாந்தில் இலங்கையர்கள் கைது




கொழும்பில் உள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக சென்னைக்கு பயணிக்க இருந்தபேோது இந்த சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக பெருமளவு தங்கத்தை இந்தியாவிற்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின்போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் வெளியேறும் நுழைவாயிலில் வைத்து முதலில் 4 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 1,060 கிராம் எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,370 கிராம் எடையுடைய தங்கத்துடன் இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபாய் பெறுமதியான தங்கம் சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த இந்திய பிரஜைகள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைத் தந்திருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதானோர்
இந்திய பிரஜைகளிடம் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

9 இலங்கை பிரஜைகள் கைது

இதேவேளை, தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க ஆபரணங்களை கொண்டு வர முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ள் இருக்கலாம்
தாய்லாந்து தலைசகர் பாங்காக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த இரண்டு விமானங்களில் இந்த சட்டவிரோத தங்க ஆபரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் நான்கு கிலோகிராம் எடையுடைய ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.