ஆசிய ஆணழகனுக்கு கௌரவிப்பு




(க.கிஷாந்தன்)    
ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்ற மலையகத்தில் லபுக்கலை கொண்டகலை பிரிவில் வசிக்கும் இளைஞரான மாதவன் ராஜ்குமார் என்பவரை ஊக்குவிக்கும் வகையில் அவரை வரவேற்று அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பணத்தை இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் 02.08.2019 அன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
இலங்கை – இந்திய சமுதாய பேரவையும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இணைந்து இந்த அன்பளிப்பினை வழங்கியுள்ளது. அத்துடன் எதிர்வரும் காலத்தில் டுபாய் நாட்டில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியில் பங்குபற்றுவதற்காக செல்லவுள்ள இவருக்கு விமான பயணசீட்டும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உப தலைவர், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.