(க.கிஷாந்தன்)
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் 04.08.2019 அன்று காலை 10.30 மணியளவில் வயோதிபவர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றதாகவும் புகையிரதம் வரும் பொழுது புகையிரத வீதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை ஒலிரூட் பகுதியை சேர்ந்த டபிள்யூ.எம்.சந்திரசேன வயது (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment