மாலத்தீவில் இருந்து வந்த இழுவைக் கப்பலில் மாறுவேடத்தில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் தேதி மாலத் தீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில் இந்தோனீசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27 ஆம் தேதி சரக்கை இறக்கிவிட்டு தூத்துக்குடி நோக்கி வந்த இந்த இழுவைப் படகில் பத்தாவதாக ஒரு நபர் வந்துள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து உளவுத்துறையினர் நடுக்கடலில் படகில் வந்த பத்தாவது நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தப் பத்தாவது நபர் மாலத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமத் அதிப் என்பது தெரியவந்தது. இந்நிலையில் விர்கோ 9 இழுவைப் படகை தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அகமத் அதிப்பிடம் சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment