அநாமதேய துண்டுப்பிரசுரம்




பாறுக் ஷிஹான்


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெயரில் தாமரை மொட்டு  இலச்சினையுடன்  அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்துண்டுப் பிரசுரமானது  சனிக்கிழமை (3) அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும்  கல்முனை மருதமுனை நற்பிட்டிமுனை பகுதிகளில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது மக்கள் மத்தியில் சலசலப்பை  ஏற்படுத்தி உள்ளதுடன் எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

    இந்த துண்டுப்பிரசுரமானது  நான்கு பக்கங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளதுடன் " பதில் " என்ற பெயரில் நீங்கள் இந்த நாட்டின் பெருமைக்குரிய பிரஜைகள் என்ற உப தலைப்புடன் வெளியாகியுள்ளது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இத்துண்டுப்பிரசுரம் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.