பாறுக் ஷிஹான்-FAROOK SIHAN
அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
காரைதீவு விபுலானந்தம் சதுக்க முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம் பெற்றது.
இதன் போது நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் சிறிது தூரம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊர்வலமாக சென்றதுடன் இறுதியாக ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்தனர்.
இதில் வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்காதே அரச நியமனத்தில் பட்டதாரிகளுக்கு உள்வாரி வெளிவாரி என பாகுபாடு காட்டாதே உட்பட பிரிவினையின் வித்தான ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசே வெளிவாரி பட்டதாரிகளூக்கும் நியமனம் வழங்கு என்ற பதாகைகளை அடங்கிய சொற்களை ஏந்தியவாறும் வெளிவாரி பட்டதாரிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.
மேலும் தங்களுக்கான நியமனங்களை விரைவாக வழங்கக் கோரியும் பட்டதாரிகளுக்கு பாகுபாடு காட்டாமல் இந்த ஆளும் அரசாங்கம் நியமனங்களை வழங்க வேண்டும் என கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்கள்.இதில் ஆண் பெண் வெளிவாரி பட்டதாரிகள் உயர் தேசிய டிப்ளோமாதாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment