கோதுமை மா லொறி விபத்து




(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பகுதியிலிருந்து டயகம பகுதிக்கு கோதுமை மா 800ற்கும் மேற்பட்ட பைகளை ஏற்றிச்சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் நாகசேனை பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

05.08.2019 அன்று காலை 9 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

லொறியில் சாரதியும், உதவியாளர் உட்பட 5 பயணித்துள்ளதாகவும், ஐவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த கனரக லொறியில் கோதுமை மா பைகளை  பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.