சிறுகதை எழுதிய எழுத்தாளருக்கு பிணை




சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சிறுகதை எழுத்தாளர் சக்தி சத்குமாரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) குருநாகல் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே அவரை பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
பேஸ்புக்கில் சிறுகதை ஒன்றை பதிவிட்டதன் மூலம் பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் விமர்சித்தாரென சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய ஐ.நா. ஆதரவு சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார்.
இருப்பினும் அவரது கைது தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை மனித உட்பட மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், அவரை விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.