குருநாகல் பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
குறித்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று அனுமதி வழங்கியிருந்தது.
இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று காலை இந்த விடயம் தொடர்பில் மீண்டும் விவாதித்த பின்னர், இடமாற்றத்தை இரத்து செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment