பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!




அம்பாறை  பிராந்தியத்தில் நல்லிணக்கத்தை கொண்டு வரும் பொருட்டு அரசாங்க திணைக்களங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள்  எவ்வாறான பங்களிப்புகளை செய்யலாம் என்பது தொடர்பாக  இரண்டாவது நாள் செயலமர்வு   கல்முனை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் இளைஞர் அபிவிருத்தி அகம் திட்ட முகாமையாளர் க.லவகுகராஜா ஆகியோரின்  தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கிருஸ்ரா  இல்லத்தில் வியாழக்கிழமை (1)  காலை 9.30 மணியளவில்  ஆரம்பமானது.மூன்று கட்டமாக இடம்பெறவுள்ள இச்செயலமர்வில்   முதல் கட்டமாக கடந்த புதன்கிழமை அன்று  அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம்  கிறிஸ்தவ   சிவில் அமைப்புகளின் தலைவர்கள் மதத் தலைவர்கள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை பிரதேசங்களில் இன நல்லிணக்கத்திற்கு சவாலாக உள்ள பிரச்சினைகள் மற்றும் தீர்வைகள் தொடர்பாக கலந்து பேசினர்.

அடுத்து இரண்டாம் நாளான வியாழக்கிழமை(1) அரச அதிகாரிகள் மற்றும் 13 பிரதேச செயலக  திணைக்கள தலைவர்கள் கல்வி அமைச்சின் கிழக்கு மாகாண செயலாளர் பணிப்பாளர்கள் பொலிஸ் அதிகாரிகள்   அம்பாறை வன விலங்கு திணைக்களம் கல்முனை அக்கரைப்பற்று பிராந்திய   சட்ட உதவி ஆணைக்குழு  பிராந்தியசுகாதாரதிணைக்களம்  பாதிக்கப்பட்டபெண்கள் அரங்கம்  சம்வோதயம் சிவில்சமூகங்களின் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்பு பிரதேச தவிசாளர்கள் என பல்வேறு துறைசார் அமைப்பினரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

 இதன் போது கிழக்கு  மாகாணத்தில் இனங்களிற்கிடையே நல்லிணகக்கத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக  கொண்டு அம்பாறை மாவட்டத்தில் தமிழ்  முஸ்லிம்   சமூகங்களையும் ஒன்றிணைத்து எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக  அரசதிணைக்களங்களின் அதிகாரிகள்   மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பவற்றின் முன்னிலையில் பிரச்சினைகளைதெரியப்படுத்திதீர்வுக்கான களம் அமைத்துகொடுத்தல் மற்றும் இளைஞர்களைஒன்றினைத்துநல்லிணக்கம் தொடர்பானதெளிவினைஏற்படுத்திமாவட்டத்தில் நல்லிணக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பினைஏற்படுத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.


  இதில் அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்டோருக்கான உறவுகளின் தலைவி தங்கராசா செல்வராணி கருத்து தெரிவிக்கையில் 


கடந்த 5 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக போராட்டம் உக்கிரமடைந்தது. பிள்ளைகள் வருவார்கள் என்று எதிர்பார்த்த தாய்மார்களில் 40 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர் கடந்த மாதம் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.

2001ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் பின் இந்த மண்ணில் மீண்டும் ஒரு இனப்படுகொலையும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களும் நடைபெற கூடாது என்பதை வலியுறுத்தியே நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரண சான்றிதழ் வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது குறித்த உத்தரவாதப்பத்திரமே  வேண்டும். மரண சான்றிதழ் வழங்குவதற்கு என் கண் முன்னே கடந்து செல்லப்பட்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படவில்லை கொலை செய்யப்படவில்லை ஆகவே அவர்களுக்கு வாரம் மரண சான்றிதழ் வழங்க முடியும்.

எட்டு மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜனாதிபதியிடம் பலமுறை மனுக்களை வெயில் மழை என்று பாராமல் சென்று வழங்கியுள்ளோம் அவற்றிற்கான நடவடிக்கைகள் இன்றுவரை  எடுக்கப்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என்பது வெறுமனே தமிழர்களுக்கான ஒன்றல்ல .சிங்கள மக்கள் முஸ்லிம் மக்கள் ஆகியோரும் தங்களது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.


மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் கருத்து கூறுகையில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மனநிலையிலிருந்து பார்த்தால்தான்அவர்களது வலியும் வேதனையும் கண்ணீரும் எமக்கு புரியும் .

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் விடயத்தில் சிவில் அமைப்புகள்இ மனித உரிமை ஆணைக்குழு இணைந்து மொழி மதம்இ இனம்இ அப்பால் சென்று செயற்பட வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது அரசாங்கம்தான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் இதற்கு அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

குற்றம் செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.