புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள 1253 உள்வாரி பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவித்ததாவது,
நாட்டில் இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது.இந்த அரசின் ஊடாக பல வேலைத்திட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.ஆனால் இந்த அரசில் அங்கம் வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த தரப்புடனும் கலந்தாலோசிக்காது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை திருட்டுத் தனமாக பிரதமராக்கினார்.அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டார்.இதனால் பல வேலைத்திட்ட்ங்கள் தடைப்பட்ட்ன.அதிலும் முக்கியமாக இனப்பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பு பின்னோக்கி நகர்ந்தது.அதுமட்டுமல்லாது மகாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்புக்கு முழுக்க முழுக்க தடையாக இருந்தனர்.இதனாலேயே அரசியலமைப்பு உருவாவதில் பின்னடைவு ஏற்பட்டது – என்றார் மாவை
( Jaffna reporter )
Post a Comment
Post a Comment