(க.கிஷாந்தன்)
மஹியாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவெவ பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குறித்த சிறுமியின் பாட்டி பலத்த காயங்களுடன் மஹியாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மஹியாங்கனை குடாவெவ பகுதியை சேர்ந்த ஷாலிக மதுஷானி எனும் 8 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யானை ஒன்று வீடொன்றை உடைத்துக் கொண்டு சென்றதில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மஹியாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment