சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இலங்கையின் பிரபல சிறுகதை எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பேஸ்புக்கில் சிறுகதை ஒன்றை பதிவிட்டதன் மூலம் பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் விமர்சித்தாரென சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய ஐ.நா. ஆதரவு சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் பகிர்ந்து கொண்ட கற்பனைக் கதை பௌத்த கோவிலில் உள்ள வாழ்க்கையைப் பற்றியதுடன் அதில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து அறிக்கை ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்பு சபை, “கருத்துச் சுதந்திரத்திற்கான தனது உரிமையை அமைதியாகப் பயன்படுத்தியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷக்திக சத்குமாரவை, உடனடியாகவும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும்” என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 291 (பி), இந்த படி, எந்தவொரு நபரும் யுத்தத்துக்கு அல்லது பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு தூண்டுகோலாக அமைந்த தேசிய, இன அல்லது மத வெறுப்புக்கும் பரிந்துரைக்க கூடாது.
குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஷக்திக சத்குமார குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment