அடையாள பணிப்பகிஸ்கரிப்பு




பாறுக் ஷிஹான்  

சம்பள உயர்வு கோரி அடையாள பணிப்பகிஸ்கரிப்பை தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (30)மேற்கொண்டனர்.

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்து தொழிற்சங்கங்கள் ஏற்கனவே தீர்மானத்தின் பிரகாரம் உயர் கல்வி அமைச்சிற்க்கும் அரசாங்கத்திற்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம் அவை நிறைவேற்றப்படாமல் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது தொடர்ந்து தங்களது ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் முன்னெடுத்தனர்.

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் எம்.எம்.நௌபர் கருத்து தெரிவிக்கையில்.

கடந்த வருடம் தொடர்ந்து 55 நாட்கள் பணிப் பகிஷ்கரிப்பை நமது ஊழியர் சங்கங்கள் மேற்கொண்டிருந்த போதும் எந்தவித முன்னேற்றமும் இல்லை இந்த வருடம் இதன் தொடர்ச்சியாக இன்று ஒருநாள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றோம்.

வாழ்க்கைச் செலவுக்கான மாதாந்த இழப்பீட்டு கொடுப்பனவு பொதுவான காப்புறுதி ஓய்வு ஊதியம் என்பன பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஜூலை மாதம் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 2500 ரூபாய் சம்பள அதிகரிப்பு பல்கலைக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை இதுபோன்ற ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பு இடம்பெற்று வருகிறது.


இந்த போராட்டம் வெற்றி அளிக்காத பட்சத்தில் நமது தொழிற் சங்கங்களை இணைத்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என  தெரிவித்தார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்..

தொழிற்சங்கங்கள் அழைப்பின் பேரில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது கடந்த வருடம் அரசாங்கம் வாக்குறுதி அளித்து தொடர்ந்து நமது தொடர் போராட்டத்தை கைவிட்டு பணியை தொடர்ந்து இருந்தோம் இந்த விடயத்தில் அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.இது ஒரு பக்கச் சார்பான விடயம் .


அரசாங்கம் கடந்த வருடம் முன்பு அளித்த வாக்குறுதி எனது எமது போராட்டத்தை நிறுத்துவதற்கான தந்திரோபாயமாகவே பார்க்கப்படுகின்றது .அரசாங்கம் எனது  கருத்துக்கு செவிசாய்க்க வில்லையெனில் போராட்டம் தொடர் போராட்டமாக மாறும் என்பதை வலியுறுத்துகிறோம்.