இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த




பாறுக் ஷிஹான்

நாட்டில்  அண்மையில்  இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையின் பின்னர் இனங்களுடையே நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பும்  நோக்கோடு இந்த கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு  மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் இணைந்து ஏற்பாடு செய்த 3 நாள் கலந்துரையாடலில்  முதலாம் நாள் செயலமர்வு  கல்முனை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் இளைஞர் அபிவிருத்தி அகம் திட்ட முகாமையாளர் க.லவகுகராஜா ஆகியோரின்  தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கிருஸ்ரா  இல்லத்தில் புதன்கிழமை  (31) புதன்கிழமை காலை 10 மணிக்கு  சர்வ மத பிராத்தனையுடன் ஆரம்பமானது.

 மூன்று கட்டமாக இடம்பெறவுள்ள இச்செயலமர்வில்   முதல் கட்டமாக இன்று அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ,  சிவில் அமைப்புகளின் தலைவர்கள் மதத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில்  இன ரீதியான அல்லது சமய ரீதியான  பிணக்குகள் இந்த சமூகத்தில் அண்மை காலமாக வெளிவந்த வண்ணம்  உள்ளது   என்பதை எவ்வாறு ஆராய்ந்து தீர்க்க  வேண்டும் என்பது தொடர்பாகவும்  இந்த கலந்துரையாடலின்  போது   கருத்துக்கள் பெறப்பட்டன. 

மேலும் தற்போது  முஸ்லிம் சமூகத்தை ஏனைய  சமூகங்கள் பார்க்கும்  பார்வை தான் கடந்த 10 வருடங்களுக்கு முன் தமிழ் சமூகத்தை  ஏனைய முஸ்லிம் சிங்கள சமூகங்கள் பார்த்தனர். இது  பகைமை உணர்வு அல்ல அச்ச உணர்வு மாத்திரமே என வளவாளர்களால் கலந்துரையாடலில் விளக்கமளிக்கப்பட்டது.அவசரகால சட்டத்தில் தனிமனித எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆராயப்பட்டன. 

இந்த நிகழ்வில் இளைஞர் அபிவிருத்தி  .அகம் நிறுவன திட்ட முகாமையாளர் கண்டுமணி லவகுசராசா, அமைப்பின் திட்ட இணைப்பாளர் அ.மதன் சிவில் அமைப்பாளர்கள்,மத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.