போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்துக்கு இடைக்காலத் தடையுத்தரவு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் யசந்தா கோட்டேகொட உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் இன்று இந்த மனுவை பரிசீலித்தது. இதன்பின்னர் இந்த மனு மீதான விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன தாக்கல் செய்த மேற்படி மனுவைப் பரிசீலிக்க ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் நேற்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment