உலக முஸ்லிம் லீக் சுமார் 90 கோடி நிதி உதவி




(எ.எம்.றொஸான்)
உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று(30) இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மாநாட்டின் விசேட அதிதியாக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி ஷேய்க். அப்துல் கரீம் அல் ஈஸா, இன நல்லுறவிற்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இங்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி சேக் அப்துல் கரீம் அல் ஈஸா அமெரிக்க டொலர் 5 மில்லியன் அதாவது இலங்கை நாணயப்படி 90 கோடி ருபாவை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.
அமைதி,சமாதானம் மற்றும் சக வாழ்விற்கான தேசிய மாநாடு எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் வெளிநாட்டவர்கள், இலங்கையின் சகல பிரதேசங்களில் இருந்தும் பெறுமளவான புத்திஜீவிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

(எ.எம்.றொஸான்)