பயங்கரவாதத்தை தடுப்பதற்கு தெளிவான சட்டம் தயாரிப்பு




பயங்கரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து அடிப்படை வாதிகளையும் புறம்தள்ளி மீண்டும் ஐக்கியத்துடன் நாடு தலைநிமிறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

17 இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுடன் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போது சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட தெரிவுக்குழு மற்றும் அமைச்சுக்களை இணைத்து பயங்கரவாதம் மற்றும் அதனை ஊக்குவிக்கும் அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு தெளிவான சட்டத்திட்டங்களை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார். 

ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையர் என்ற ரீதியில் வாழ்வதற்கான அடிப்படை இதன்மூலம் வகுக்கப்படும் என்று சபாநாயகர் இதன்போது தெரிவித்தார். 

சபாநாயகருடனான சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவுக்குழுவின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)