கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி குறித்த உப பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
கடந்த இரண்டு நாட்களை விடவும் இன்று அதிக மதகுருமார், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை, உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினகளான எஸ்.வியாழேந்திரன், க.கோடீஸ்வரன் ஆகியோரும் இன்று சென்றனர். இவர்கள் மூவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபவர்களுடன் உரையாடினார்கள்.
கடந்த திங்கட்கிழமை காலை தொடக்கம் கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலயப் பிரதம குருவுமான சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை கிறிஸ்தவ போதகர் அருட்தந்தை கிருபைராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment