"இலங்கையில் நாங்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். உலகத்தில் நாங்கள் பெரும்பான்மையினர்."




"இலங்கையில் நாங்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். உலகத்தில் நாங்கள் பெரும்பான்மையினர்."
-கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
எங்களை அடக்கி ஒடுக்க நினைக்க வேண்டாம்.
ஏந்தவொரு சவாலையும் நாங்கள் சட்டரீதியாக சந்திப்பதற்கு தயார்.
பயங்கரவாதிகளுக்கு நாங்கள் ஆதரவு கிடையாது. முஸ்லிம்களாகிய நாங்கள் வழங்கிய ஒத்துழைப்புடன்தான் ஒரு மாத காலத்திற்குள் பயங்கரவாத்தினை முடக்க முடிந்தது.
பயங்கரவாதத்தினை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி, முப்படைகளின் தளபதிகள், கிழக்கு பிராந்திய படை அதிகாரிகளுக்கு எமது நன்றிகள்.
முன்னால் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (07) காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் ஆற்றிய உரையின் போது தெரிவிப்பு!
(MSM. Noordeen)