நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்




போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையின் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது.

இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோருக்கு இடையான சந்திப்பு இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.

நாளை பிற்பகல் 02.00 மணிக்கு நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்த போதிலும் அதற்கு புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் இணங்கவில்லை என்று பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.