தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் 13.06.2019 அன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்தோடு, மற்றுமொருவர் படுங்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள், தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் வீதியை கடக்க முயற்சி செய்த பாதசாரதி மீது இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டர் சைக்களின் முன்சில்லில் சிக்குண்டு படுகாயமடைந்த நிலையில் பாதசாரதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை நானுஓயா தோட்டத்தைச் சேர்ந்த திருமணமான சுப்பிரமணியம் தியாகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மோட்டார் வண்டியின் சாரதி படுகாயமமைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment