கோட்டாவின் மனு நிராகரிக்கப்பட்டது




பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த ரிட் மனு, திருத்தத்துக்கான மனு என்பன விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலே​யே நிராகரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை- மெதமுலன டீ.ஏ. ராஜபக்‌ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்கும் போது, 34 மில்லியனுக்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ​கோட்டாவுக்கு எதிராகக் குற்றஞ்சுமத்தப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குத் தொடர்பில், மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வலுவற்றதாக்கும் கட்டளை​களை வெளியிடுமாறுக் கோரி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த ரிட் மனுவே விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.
அச்சல வெங்கபுலி, அர்ஜுன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாத்தால் ,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.