அமைச்சுப் பதவியை மீண்டும் பெற்றுக்கொண்ட கபீர் மற்றும் ஹலீம்




ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். 

ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். 

அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.