கையளிப்பு




பாறுக் ஷிஹான்

 புனரமைப்பு செய்யப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பணி மண்டபத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று காலை காரைதீவில் நடைபெற்றது. 

 இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய விவகார அலுவல்கள் திணைக்கள நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இம் மண்டப பெயற்பலகை திரையை  திறந்து வைத்த அதிதிகள் சுவாமி விபுலானந்தரின் பிறந்த இல்லத்தை பார்வையிட்டதுடன்  அறநெறி கல்விநிலையத்தையும் ஆரம்பித்து வைத்தனர். 

இந்நிகழ்வுக்கு தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துவிவகார அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ஜெகதீசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிரில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகதீசன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.