துபாயில் கைதான, மொஹம்மட் மில்ஹான் உள்ளிட்ட 5சந்தேகநபர்கள் இலங்கையில்




உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 05 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.