இராவணா - 1 விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது




இலங்கையின் முதலாவது செய்மதியான இராவணா - 1 விண்வெளியில் சற்று முன்னர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையை சேர்ந்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுகிறது. 

கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி இராவணா - 1 என்ற செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது. 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து குறித்த செய்மதி, விண்வெளியில் பூமியை சுற்றி வரும் ஒழுக்கில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.