. லாராவை வாழ்த்திய சச்சின் #HBDLara




முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரயன் லாராவுக்கு இன்று 50-வது பிறந்தநாள். 1990-ம் ஆண்டு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான லாரா, கிரிக்கெட் விளையாட்டின் 'ஆல் டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்'களில் ஒருவர். லாராவின் நெருங்கிய நண்பரான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். #HBDLara
வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்துவந்த நேரத்தில், ஒற்றை ஆளாய் நின்று ரன் சேர்த்தவர், லாரா.  1994-ம் ஆண்டு, ஆண்டிகுவா செயின்ட் ஜான் மைதானத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 375 ரன்களை எடுத்தார்.  சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2004-ம் ஆண்டு, அதே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 400* விளாசியதை கிரிக்கெட் லவ்வர்ஸ் மறந்திருக்க வாய்ப்பில்லை. 131 டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களும், 299 ஒருநாள் போட்டிகளில் 10,405 ரன்களும் குவித்துள்ளார். அதில், 9 டபுள் செஞ்சுரியும், 2 ட்ரிபிள் செஞ்சுரியும் அடங்கும். இடதுகை பேட்ஸ்மேனான லாரா, அனைத்து ஷாட்டுகளையும் அடிக்கும் கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வந்தவர்.  முதல்தர கிரிக்கெட்டில் 501* நாட் அவுட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400* நாட் அவுட் என மாபெரும் ரன்களைத் தனது அதிகபட்ச ரன்களாகத் தன்வசம் வைத்துள்ளார் லாரா. 
#HBDLara
லாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ள சச்சின், "பல ஆண்டுகளாக லாராவை எனக்குத் தெரியும். அவர் ஒரு ஜென்டில்மேன். கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்திருக்கும் லாராவுக்கு, இந்த ஆண்டும் சிறப்பாக அமைய வேண்டுகிறேன். 50 முடிந்தது, இன்னும் 50 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.