தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக




(G.K.Kishaanthan)

திம்புள்ள பத்தனை போகாவத்தை தோட்ட நிர்வாக அதிகாரிக்கு எதிராக தோட்ட மக்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக மூடப்பட்டிருக்கும் தேயிலை தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கியின் உலோகங்கள் திருடப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில் தொழிற்சாலைக் காவலில் ஈடுப்பட்டிருந்த இரண்டு காவலாளிகள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலை முன்பாக சுமார் 6 மணித்தியாலயங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்மையான குற்றவாளியை இணங்காணும் வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.