ஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்தியவரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எனத் தெரிவிக்கப்படுபவருமான நாமல் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்ய வருகை தந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஹெட்டிபொல நகரில் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் மேற்கொண்ட வன்முறையின்போது நாமல் குமார அங்கு நின்ற காட்சி ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டிருந்தது.
அதேவேளை, அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பிக்கும் நாமல் குமார எம்.பிக்கும் இடையில் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற காட்சியும் ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹெட்டிபொல வன்முறை சம்பவத்துடன் நாமல் குமாரவுக்கும் தொடர்புள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment