அட்டாளைச்சேனையில்,கைத்துப்பாக்கி வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்




#இர்சாத்.
அட்டாளைச்சேனையில் கைத்துப்பாக்கி ஒ்ன்றை (MM 38) வைத்திருந்தவரை, இம் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்க மறியிலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று பதில் நீதிபதி, எஸ்.எல்.ஏ றசீத் இன்று கட்டளை பிறப்பித்தார்.

அக்கரைப்பற்றுப் பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றின் பேரில்,குறித்த வீட்டினை நேற்றை தினம் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.  குறித்த வீட்டில் கைத்துப்பாக்கி காணப்பட்டதாகவும், இது எந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது பற்றி பரிசோதிக்க விசேட பொலிஸ் குழு கொழும்பிலிருந்து வருவதாகவும்,1966 ஆயுத சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக  நபருக்கு எதிராக தாம் வழக்குத் தொடந்துள்ளதாகவும் அக்கரைப்பற்றுப் பொலிசார் இன்று நீதிமன்றில் தெரிவித்ததுடன், விசாரணை முடிவடையாத காரணத்தினால், இவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறும்  நீதிமன்றில் கோரினர்.