ஐ.எஸ், ஐ.எஸ் தௌஹீத் ஜமாஅத் ஆகியவற்றுக்கு எதிராக




உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது,  தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி, 250 க்கு மேற்பட்டோரை படுகொலைச் செய்து, 500 இற்கு மேற்பட்டோரை காயமடையச் செய்த ஐ.எஸ்.  அமைப்புக்கு எதிராக,  இன்று (24) ஜும்மா தொழுகையின் பின்னர்,  நீர்கொழும்பில்  முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
பெரியமுல்லையில் அமைந்துள்ள, பெரிய பள்ளிவாசலின் முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜும்மா மஸ்தித் வீதி வழியாக நீர்கொழும்பு – சிலாபம்  பிரதான வீதியில் அமைந்துள்ள யூஸுபியா பள்ளிவாசல் வரை பேரணியாக வந்து, பிரதான வீதியோரத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அவர்கள் பதாதைகளையும் , ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும், தேசிய தௌஹீத் ஜமாஅத்தினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு எதிராகவும், குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மரணித்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்புக் கோசங்களையும் எழுப்பினர்.