பதில் பாதுகாப்பு அமைச்சராக




பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதன் காரணமாகவே ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சீன விஜயம் எதிர்வரும் 15ம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அதுவரை ருவன் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.