மத்திய மாகாணத்தில் சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு




மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பணிப்புரைக்கமைய மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளும் (14) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இன்று காலை திறக்கப்பட்டிருந்த சகல மதுபானசாலைகளும் இன்று பிற்பகல் 02 மணியவில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறுகின்ற அசம்பாவித சம்பவங்களையடுத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.