குளியாப்பிட்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்




குளியாப்பிட்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, குளியாப்பிட்டிப் பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (புதன்கிழமை) முதல் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நுகேகொடை பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிப் பொலிஸ் பிரிவுக்கு அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமையும் குளியாப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குளியாப்பிட்டிப் பொலிஸ் அத்தியட்சகர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.