சரத் விஜேசூர்யவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு




நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் சரத் விஜேசூர்யவை ஜூன் மாதம் 21 ஆம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அனில் வசந்த அல்விஸ் ஆகியோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

சரத் விஜேசூர்ய சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு முறை நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த நபருக்கு ஏன் தண்டனை வழங்கக்கூடாது என விசாரித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மனுதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.