சவுதி தூதரகம் இலங்கையிலுள்ள சவுதியர்களுக்கு விசேட அறிவிப்பு




இந்நாட்டிற்கு வந்துள்ள சவுதி அரேபிய நாட்டவர்களை வெளியேறுமாறு இலங்கையிலுள்ள சவுதி தூதுவர் காரியாலயம் டுவிட்டர் செய்தியின் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக சவுதி நாட்டு தொலைக்காட்சி சேவையொன்று அறிவித்தல் விடுத்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அவ்வறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளதாக சகோதர தேசிய நாளிதழொன்று தெரிவித்துள்ளது.