பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (16) பிறப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள், பதாகைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைகழக மாணவா்கள், மற்றும் சிற்றுண்டிசாலை உாிமையாளா் ஆகியோா் கடந்த 3 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.
(யாழ். நிருபர் பிரதீபன்)

Post a Comment
Post a Comment